புதுதில்லி, செப். 12 - உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டில் நடத்தப்பட்ட ‘கணபதி பூஜை’யும், அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டதும் சர்ச்சைகளை ஏற்படுத்தி யுள்ளது.
இந்திய நீதித்துறையின் மீதான நம்பகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை, இந்த நிகழ்ச்சி கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் அதிருப்தியையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இல்லத்தில் நடந்த கணபதி பூஜை யில் பிரதமர் மோடி கலந்து கொண்ட வீடியோ வெளியாகியிருக்கிறது.
அதில், புதுதில்லியில் உள்ள டி.ஒய். சந்திரசூட்டின் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமையன்று செல்கி றார். அவரை, வீட்டின் வாசலில் நின்று, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டும், அவரது துணைவியார் உள்ளிட்ட குடும் பத்தினரும் வரவேற்கின்றனர். பின்னர் பூஜை யறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கணபதி சிலைக்கு, பிரதமர் மோடியே ஆரத்தி காட்டுகிறார். அப்போது, தலைமை நீதிபதி யும், அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தி னரும் பூஜையில் பங்கேற்று மந்திரங்களை முணுமுணுக்கின்றனர். பூஜையின் போது, மகாராஷ்டிரா மாநிலத்தின் பாரம்பரியப்படி யான தொப்பியை பிரதமர் தனது தலையில் அணிந்திருக்கிறார்.
இந்த நிகழ்வுதான் தற்போது சர்ச்சைக ளுக்கு உள்ளாகியிருக்கிறது. காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், இந்திரா ஜெய் சிங் ஆகியோரும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத், “அரசியலமைப்பு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான இத்தகைய சந்திப்பு நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைமதிப்புக்கு உள்ளாக் கும்” என்று தெரிவித்துள்ளார்.
“பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் வீட்டு ‘கணபதி பூஜை’ யில் கலந்து கொண்டுள்ளார். அரசியல் சட்டத் தின் பாதுகாவலர்கள் (உச்ச நீதிமன்ற நீதிபதி கள்), அரசியல்வாதிகளை இந்த வகையில் சந்திப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்பும் என்பதே எங்களின் கவலை. மகாராஷ்டி ராவின் தற்போதைய அரசு குறித்த எங்க ளின் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியின் முன்பு விசாரணைக்கு வர இருக்கி றது. பிரதமர் மோடியும் அதில் ஒரு பகுதி யாக இருக்கிறார். இப்போது எங்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கவலை ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கும் ராவத், இன்னும் ஒருபடி மேலே சென்று, “அந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வது பற்றி தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
சிவசேனா (யுபிடி) கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதியும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
“இந்த விழாக்கள் (கணபதி பூஜை) முடிந்ததும், மகாராஷ்டிரா வழக்குகள், அரசி யலமைப்பு பிரிவு 10-இன் அப்பட்டமான புறக்கணிப்பு குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொருத்தமான வராக இருப்பார், சுதந்திரமாக செயல் படுவார்! என்று கருதுகிறேன்” என்று மறை முகமாக விமர்சித்துள்ள பிரியங்கா சதுர் வேதி, “பொறுத்திருந்து பார்ப்போம், தேர்தல் அறிவிப்பு தொலைவில் இல்லை. அதனால் அந்த வழக்குகள் வேறொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்படலாம்” என்றும் சந்தேகம் தெரி வித்துள்ளார்.
“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், பிரதமர் மோடியை தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. அரசு நிர்வாகத்தி டமிருந்து குடிமக்களின் அடிப்படை உரி மைகளை பாதுகாக்கும் மற்றும் அரசியல மைப்பின் வரம்புக்குள் அரசு செயல்படு வதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு இது மிகவும் மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது” என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நிர்வாகத்துறைக்கும், நீதித்துறைக்கும் இரு கைகள் எட்டும் தூரம் இடைவெளி இருக்க வேண்டும்” என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வழக்கறிஞரும் சமூக செயற் பாட்டாளருமான இந்திரா ஜெய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடை யிலான அதிகாரங்களைப் பிரிப்பதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சமரசம் செய்துள் ளார். தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை அனைத்தும் போய் விட்டது. நிர்வாகத்திடம் இருந்து தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் சமரசம் வெளிப் படையாகி விட்ட நிலையில், இந்த விஷயத்தி ற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பாஜகவானது, “கணபதி பூஜை என்பது ஒரு கலாச்சார நிகழ்வு. அதில் பிரதமர் மோடி பங்கேற்றதில் எந்த தவறும் இல்லை” என சமாளித்துள்ளது.
தலைமை நீதிபதி இல்ல கணபதி பூஜை யில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நெருக்கம் காட்டியது, ஒட்டு மொத்தமாகவே உச்ச நீதிமன்றம் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருப்பது ஒருபுறமிருக்க, இந்த நிகழ்வு குறிப்பாக மகாராஷ்டிர அரசிய லில் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பாஜக ஆதரவுடன் தற்போதைய ‘ஏக்நாத் ஷிண்டே தலை மையிலான கூட்டணி ஆட்சியானது, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டது; ஷிண்டே தலைமையிலான கட்சியே சிவசேனா என்று கூறி, கட்சியின் வில்-அம்பு சின்னமும் அவர்களுக்கே ஒதுக்கப்பட்ட தை ஏற்க முடியாது’ என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தான் விசாரித்து வருகிறது.மகாராஷ்டிராவிற்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் அறி விக்கப்பட உள்ள நிலையில், கட்சி, சின்னம் தொடர்பான விவகாரம் மீண்டும் முன்னு க்கு வரும் என்ற நிலை இருக்கிறது.
இந்த பின்னணியில் தான், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரும், அந்த மாநிலத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வருப வருமான தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட்டின் இல்லத்திற்கு பிரதமர் மோடி சென்றதும், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில பாரம் பரிய தொப்பியை அணிந்து கொண்டு, கணபதி சிலைக்கு பூஜை செய்ததும் பல் வேறு சந்தேகங்களை கிளறி விட்டுள்ளது.