காசாவில் மோசமான நிலை வெட்கக்கேடு : போப் கண்டனம்
காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமாகியுள்ளது வெட்கக்கேடானது என போப் பிரான்சிஸ் விமர்சித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலால் மருத்துவமனை கள் அழிக்கப்பட்டது, எரிபொருள் பற்றாக் குறை, மோசமான வாழ்க்கை நிலைமை, கடும் குளிரில் குழந்தைகள் உறைந்து சாவது ஆகியவற்றை ஏற்க முடியாது. 15 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தனது இனப்படுகொலையை தொடர்கிறது. “பொது மக்கள் மீதான தாக்குதலை எந்த வகை யிலும் ஏற்க முடியாது” என்றும் கண்டித்துள்ளார்.
சிரியாவில் ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
சிரியாவில் தங்கள் ராணுவம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். சிரியாவில் அமெரிக்கா சுமார் 2,000 ராணுவ வீரர்க ளை நிலை நிறுத்தியுள்ளது. அல்-அசாத் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு அவர் ஆட்சி யை பாதுகாத்து வந்த ரஷ்ய ராணுவம் வெளி யேறியது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி அந்நாட்டில் தனதுஆதிக்கத்தை அதிகரிக்க இவ்வாறு திட்டமிடு கிறது அமெரிக்கா.
காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்வு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 3 நாட்களுக்கு மேலாக பரவி வரும் காட்டுத் தீயினால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரிடர் காரணமாக சுமார் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வீடு கள் வணிக கட்டடங்கள் என 10 ஆயிரத்துக் கும் அதிகமான கட்டடங்கள் தீயில் எரிந்துள் ளன. இதுமட்டுமின்றி நூற்றுக்கணக் கான வாகனங்களும் தீயில் சிக்கியுள்ளன. தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு பின் நடத்தப்படும் ஆய்வுக்குப் பிறகே முழுமை யான சேத விபரங்கள் தெரியவரும்.
கனடா பிரதமராக போட்டியிடுவதாக சந்திரா ஆர்யா அறிவிப்பு
கனடாவில் ஆளும் கட்சியான லிபரல் கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, அக்கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா பிரதமர் வேட்பாளருக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் லிபரல் கட்சிக்கான தலைவரையும் அடுத்த பிரதமரையும் மார்ச் 9 அன்று தேர்ந்தெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் ஆபத்தான சூழலில் அகதிக்கு குழந்தை பிறப்பு
ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினை நோக்கி அகதிகள் சென்ற படகில் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி ஆபத்தான முறையில் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் அகதிகளாக கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கும் போது கடலில் ஏற்படும் விபத்து காரணமாக நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர். இந்த சூழலில் அகதிகளின் துன்பங்களை முன்னிலைப்படுத்தாமல் குழந்தை பிறப்பை புளங்காகிதமடைந்து பல ஊடகங்கள் எழுதி வருகின்றன.