world

img

தீக்கதிர் உலக செய்திகள்

2 வீரர்களை  பரிமாற தயார் : ஜெலென்ஸ்கி தகவல் 

வட கொரிய வீரர்களை பரிமாறிக் கொள்ள ஜெலென்ஸ்கி தயாராகி இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீட்க வடகொரியா ராணுவ வீரர்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் காயமடைந்த இரண்டு வட கொரிய வீரர்களைப் பிடித்து வைத்துள்ளதாக உக்ரைன் அறிவித்தது. எனினும் அவர்களின் குடியுரிமைக்கான ஆதாரத்தை வெளியிடவில்லை. தற்போது உக்ரைன் மற்றும் வடகொரியா வீரர்களை பரிமாறிக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

காட்டுத் தீயில்  24 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜன-7 அன்று ஏற்பட்ட காட்டுத் தீ அதிக காற்றின் கார ணமாக  50,000 ஏக்கர் அளவுக்கு பரவியது. இதனால் சுமார் 40,000 ஏக்கர் காடுகள் முழு மையாக தீயில் எரிந்துள்ளன. தண்ணீர் , தீய ணைப்பு வீரர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட கார ணங்களால் தீயை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயால் பலி யானவர்கள் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள் ளது. பலரை காணவில்லை. சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

பிரான்ஸ் ராணுவம்  வெளியேறுகிறது 

பிரான்ஸ் உடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஆப்பிரிக்க நாடான சாட் முடிவுக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து அங்கி ருந்து பிரான்ஸ் ராணுவம் வெளியேறத் துவங்கி யது. ஞாயிற்றுக் கிழமையன்று அபேச்சி நகரில் இருந்த ராணுவ தளத்தை சாட் ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு சுமார் 120 பிரான்ஸ் ராணுவ வீரர்கள் அவர்களின் பீரங்கி உள்ளிட்ட நவீன ரக ஆயுதங்களும் வெளியேற்றப்பட்டது. ஜனவரி 31 க்குள் பிரான்ஸ் ராணுவம் முழுமையாக வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை விட சீன ஏற்றுமதி அதிகரிப்பு 

2023 உடன் ஒப்பிடும் போது 2024 டிசம்பரில் சீனாவின் ஏற்றுமதி 10.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி 7 சதவீதம் வரை வளரும் என பொரு ளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால் சீனாவின் ஏற்றுமதி அதைவிட அதிகமாக உயர்ந் துள்ளது. அதேபோல 2023 யை விட இறக்குமதி அளவு 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி யை விட சீனாவின் ஏற்றுமதி அதிகமாக இருப்ப தால் அந்நாட்டின் வர்த்தக உபரி 104.84 பில்லி யன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

தேன் ஏற்றுமதி மூலம்  1.6 மில்லியன் டாலர் வருமானம் 

2024 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஒன்பது மாதங்களில் சுமார் 1,100 டன் தேன் ஏற்றுமதி மூலமாக மியான்மர் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்துள்ளது. இதனை அந்நாட்டின் விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஒன்பது மாத கால  தேன் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் சுமார் 1,600 டன் தேன் ஏற்று மதி மூலம் 2.4 மில்லியன் டாலர்களை மியான்மர் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

காசாவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை : அதிகாரப்பூர்வ தரவுகளை விட 41 சதவீதம் அதிகம்

காசா,ஜன.13- இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முதல் ஒன்பது மாதங்களில் காசாவில் படுகொலை செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தால் பதிவுசெய்யப்பட்ட எண்ணிக் கையை விட 41 சதவீதம் அதிகம் என லான்செட் மருத்துவ இதழின் ஆய்வுக்கட்டுரையில் தெரி விக்கப்பட்டுள்ளது.  2023 அக்டோபர் முதல் 2024 ஜூன் இறுதி வரை காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் மற்றும் தரை வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின்  எண்ணிக்கையை மதிப்பி டும் பணியில் யேல் பல்கலைக்கழகம்,லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் & ட்ராபிகல் மெடிசின் உள்ளிட்ட சில நிறுவனங்களின் ஆராய்ச்சியா ளர்கள் ஈடுபட்டனர்.  இந்த ஒன்பது மாதக்காலம் இஸ்ரேல் ராணு வத்தின் நேரடித் தாக்குதலாலும், தாக்குதலில் படுகாயமடைந்தும் 64,260 பேர் படுகொலையாகி யுள்ளனர். இதில் 59.1 சதவீதமான நபர்கள் பெண் கள், குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.  பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 46,000 பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  காசா பகுதிக்குள் வெளிநாட்டு ஊடகவியலா ளர்களை இஸ்ரேல் ராணுவமும், அரசாங்கமும் அனுமதிக்க மறுத்து வருகின்றன. இதன்காரண மாக சர்வதேச ஊடகங்களால் காசாவில் எவ்வளவு பாலஸ்தீனர்கள் படுகொலையாகியுள்ளனர் என  சுயாதீனமாக கண்டறிய முடியவில்லை. ஒவ்வொரு முறை காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பும் பாலஸ்தீன மக்களை வெளி யேற்றுவதற்கான முன்னெச்சரிக்கையை  வழங்கியதாக இஸ்ரேல் ராணுவத்தரப்பில் கூறப் படுகிறது. எனினும் தற்போதைய அறிக்கையில் வெளிவந்துள்ள புள்ளிவிபரங்கள் படி ராணு வத்தின் முன்னெச்சரிக்கை வெறும் அறிவிப்புக ளாக மட்டுமே இருந்துள்ளதே தவிர அவற்றை இஸ்ரேல் கடைப்பிடிக்கவில்லை என்ற உண்மை யும் வெளிப்படுகிறது. லான்செட் ஆய்வின்படி  55,298 முதல் 78,525 வரை இறப்பு எண்ணிக்கை  மதிப்பிட்டுள் ளது. எனினும் 64,260 நபர்கள் படுகொலையாகி யுள்ளனர் என உறுதியாக குறிப்பிடுகின்றது. அதே நேரத்தில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இறப்பு எண்ணிக்கையை 41 சதவீதம் குறைவாகப் பதிவு செய்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் தாக்கு தல் துவங்குவதற்கு முன்பு  இருந்த மக்கள்தொகை யில் 2.9 சதவீதம் அல்லது 35 நபர்களில்  ஒருவர் படு கொலையாகியுள்ளனர் என இந்த ஆய்வு தெரி விக்கிறது. இந்த எண்ணிக்கை இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலால் பாலியானவர்களின் எண்ணிக்கை மட்டுமே. போதிய சுகாதார பராமரிப்பு இன்றியோ அல்லது இஸ்ரேல் ராணுவம் உருவாக்கியுள்ள செயற்கை உணவுப் பஞ்சத்தின் காரணமாகவோ பலியானவர்கள்  அல்லது கட்டட இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாமல் புதையுண்டு போன நபர்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  லான்செட் ஆய்வில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் உறவினர்களால் இறந்துவிட்ட தாக உறுதிப்படுத்தப்பட்டவர்களை மட்டுமே அப்பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளனர்.