india

img

யெச்சூரியின் மறைவுக்கு மோடி, மம்தா பானர்ஜி இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அகில் இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி:
சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது; இடதுசாரி இயக்கத்தின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர்; அரசியல் அரங்கில் அனைவருடனும் சுமூகமான உறவை கொண்டவர்; திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர்; அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

மம்தா பானர்ஜி:
சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மறைவு செய்தி பெரும் வருத்தம் அளிக்கிறது. ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாக அவரை நான் அறிவேன். அவருடைய மறைவு தேசிய அரசியலுக்கு பெரும் இழப்பாகும்.

சரத் பவார்: 
இந்தியாவின் இடதுசாரி கட்சிகளின் முக்கியமான குரலாக சீதாராம் யெச்சூரி நினைவுகூரப்படுவார். தனது தேர்ந்த அனுபவத்தால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து இரண்டு முறை இருக்க முடிந்தது. அவரது மறைவு இடதுசாரி சித்தாந்தத்துக்கு மிகப் பெரிய இழப்பாகும். அவரது இழப்பால், கூலிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரல்கள் பறிபோய் உள்ளது.