india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் 2000க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் சிக்கி யுள்ளனர். நிலச்சரிவால் சாலைகள் துண்டிக் கப்பட்டதால், சுற்றுலா பயணிகளை மீட்க ஹெலி காப்டர் பயன்படுத்த அம்மாநில முயற்சி மேற் கொண்டது. ஆனால் மோசமான வானிலை காரண மாக ஹெலிகாப்டர் பயன்படுத்தும் முயற்சியும் தோல்வியடைந்த நிலையில், 2000க்கும் அதிக மான சுற்றுலா பயணிகள் நிலைமை மேலும் கவ லைக்குள்ளாகியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா அருகே உமந்தா காட்  பகுதியில் பாயும் கங்கை ஆற்றில் 17 பயணி களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐஸ்கிரீ மில் மனித விரல் இருந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஈ.கே.நாயனார் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரன் ஆகி யோர் எனது “அரசியல் குருக்கள்” என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை “இந்தியா வின் தாய்” என்றும் கேரளாவின் முதல் பாஜக எம்.பியும் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கோபி பேசியுள்ளார்.

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத்  ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே  திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20 அன்று வரவிருந்த நிலை யில், அவரின் பயணம் திடீரென ஒத்திவைக்கப்  பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதி கரித்துள்ளது.

கர்நாடகாவில் மாநில அரசின் விற்பனை வரி (கேஎஸ்டி) உயர்வால் அங்கு பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3.02 ரூபா யும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதுதில்லி
தில்லி குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை

பாஜக ஆளும் ஹரியானா மாநில  அரசிடம் மறைமுகமாக உத்தர விட்டு ஆம் ஆத்மி ஆளும் தில்லி மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்  சத்தை உருவாக்கியுள்ளது மோடி அரசு.  இந்த பழிவாங்கல் நடவடிக்கை காரண மாக தில்லி மக்கள் இயல்பு வாழக்கை யை இழந்துள்ள நிலையில்,  தில்லி அரசு  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்  ளது. யமுனை நதி நீர் வாரியம் மூலம் விண்ணப்பித்து குடிநீர் பெற்றுக்கொள்ள தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அறி வுறுத்தியுள்ள நிலையில், ஞாயிறன்று தில்லி குடிநீர் வாரிய அலுவலகத்தை அடித்து நொறுக்கி பாஜகவினர் வன்முறை யில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டம் நடத்து வதாக கூறி, குடிநீர் வாரிய அலுவலகத் தின் கண்ணாடி, ஜன்னல்களை உடைத்து பாஜகவினர் அராஜகம் செய்து வரு கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. 

தெலுங்கனாவில் பாஜக - பஜ்ரங் தளம் - விஎச்பி குண்டர்கள் வன்முறை

144 தடை உத்தரவு

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் சனியன்று பசு வதைக்கு எதிராக  பாஜக - பஜ்ரங்  தளம் - விஎச்பி உள்ளிட்ட இந்துத் துவா அமைப்பினர் பேரணி நடத்தி னர். இந்த பேரணியில் மாட்டிறைச்சி  விற்பனை கடைகள் மீது பாஜக - பஜ்ரங் தளம் - விஎச்பி குண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில்  வயதான முஸ்லிம் நபர்கள் உள்  ளிட்ட பலர் காயமடைந்த நிலையில்,  முஸ்லிம் மக்களும் பாஜக - பஜ்ரங் தளம் - விஎச்பி குண்டர்கள் மீது பதி லுக்கு தாக்குதல் நடத்தினர். இத னால் மேடக் நகரம் வன்முறை பூமி யாக காட்சியளித்த நிலையில், போலீ சார் தடியடி நடத்தி வன்முறையை ஒடுக்கினர். இந்த வன்முறைக்கு கார ணமான பாஜக - பஜ்ரங் தளம் - விஎச்பி குண்டர்களை சிசிடிவி ஆதா ரங்கள் மூலம் தெலுங்கனா மாநில போலீசார் தேடி வருகின்றனர்.

144 தடை உத்தரவு

இந்த சம்பவத்தை தொடர்ந்து மேடக் நகரில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேலும் முழு அடைப்புக்கு விஎச்பி, பஜ்ரங்க் தளம் அமைப்புகளும் ஆத ரவு தெரிவித்துள்ள நிலையில், மேடக்  நகரில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் மேடக் நகர எல்லைகள் போலீசாரின் கட்டுப்  பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.