india

img

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்குத் தடை - தேர்தல் ஆணையம்

ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும், முடிவுகளை வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதேபோல், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தலும், 12 மாநிலங்களில் 25 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால், மற்ற இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும், முடிவுகளை வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.