புதுதில்லி/மும்பை, டிச. 08- இந்திய பொருளாதாரம் கடுமை யான நெருக்கடியை எதிர்கொண்டுள் ளது. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கைகளும், நிதியமைச்சரின் அறி விப்புகளும் இந்த நெருக்கடியின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. பொருளாதார வளர்ச்சி குறைந்து, பண வீக்கம் உயர்ந்து, வெளிநாட்டு முதலீடு கள் வெளியேறி, வங்கித்துறை பாதிக்கப் பட்டுள்ள நிலையில் சாமானிய மக்க ளின் வாழ்க்கை மேலும் சிக்க லடைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி
நடப்பு நிதியாண்டில் (FY25) இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.2 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. இரண் டாம் காலாண்டில் வளர்ச்சி 5.4 சதவீத மாக சரிந்தது, இது 7 சதவீத இலக்கை விட வெகுவாக குறைவு. அதே நேரம் பணவீக்கம் 4.5 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த எதிர் மறை போக்குகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “அமைப்புசார் பின்னடைவு அல்ல” என்று குறைத்து மதிப்பிட முயற்சிக்கிறார்.
பணப்புழக்க நெருக்கடியும் வங்கிகளின் நிலையும்
இந்த நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளது. முக்கியமாக, வங்கிகளின் கட்டாய இருப்பு விகி தத்தை (CRR) 4.5 சதவீதத்திலிருந்து 4 சத வீதமாக குறைத்துள்ளது. இதன் மூலம் 1.16 லட்சம் கோடி ரூபாய் வங்கி அமைப்பிற்குள் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டாய இருப்பு விகிதம் என்பது வங்கிகள் தங்கள் வைப்புத்தொகை யில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு. உதாரணமாக, 100 ரூபாய் வைப்புத்தொகையில் தற்போது 4 ரூபாய் (4%) ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட வேண்டும். மீதமுள்ள 96 ரூபாயை மட்டுமே கடனாக வழங்க முடியும்.
பணவீக்கமும் வட்டி விகிதமும்
பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதத்தில் நிலைநிறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குழுவில்(MPC) உள்ள 6 உறுப்பினர் களில் 4 பேர் வட்டி விகிதத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். வெறும் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே 0.25 சதவீதம் குறைக்க ஆதரவு தெரிவித்தனர். ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.
வெளிநாட்டு முதலீடுகளின் பாதிப்பு
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை திரும்ப பெறுவதால் ரூபாயின் மதிப்பு டால ருக்கு எதிராக 1.3 சதவீதம் சரிந்துள் ளது. இதனை சமாளிக்க, வெளிநாட்டு நாணய வைப்புகளுக்கான (FCNR) வட்டி விகித உச்சவரம்பை 500 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி யுள்ளனர். இருப்பினும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
வங்கித்துறையின் சிக்கல்கள்
வங்கித்துறை வாராக்கடன்கள் அதிகரிப்பு மற்றும் இலாபம் குறைதல் என இரட்டை நெருக்கடி யை எதிர்கொள்கிறது. சிஆர்ஆர் குறைப்பால் வங்கிகளின் இலாப விகிதம் 3-5 சதவீதம் உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பெரிய கடன் வாங்கு பவர்கள் தவணை தவறுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கு வதில் தயக்கம், வசூலிப்பு நடவடிக்கைகளில் சிக்கல்கள் போன்றவை வங்கி களை தொடர்ந்து பாதித்து வரு கின்றன.
மக்கள் படும் துயரம்
இந்த பொருளாதார நட வடிக்கைகள் அனைத்தும் பெரும் வங்கிகளுக்கும், கார்ப்பரேட் நிறு வனங்களுக்கும் மட்டுமே பயன ளிக்கின்றன. சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்ற மும் ஏற்படவில்லை.
காய்கறிகள், பால், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட் களின் விலை 15-20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வ மாக 4.8 சதவீதம் என்று கூறப்படும் பணவீக்கம், உண்மையில் சாமானிய மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. வேலை வாய்ப்புகள் குறைந்து, ஊதிய உயர்வு பணவீக்கத்திற்கு ஈடு கொடுக்காத நிலையில் குடும்பங் களின் வாழ்க்கைத் தரம் வெகு வாக சரிந்துள்ளது.
சிறு வணிகர்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தவிக்கின்றனர். தனி யார் கடன் வழங்குபவர்களை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ள னர். வங்கி வைப்புதாரர்கள், குறிப் பாக மூத்த குடிமக்கள், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் குறைவதால் பாதிக்கப்படுகின்ற னர். நடுத்தர வர்க்கத்தினர் வீட்டுக் கடன், வாகனக்கடன் தவணை களால் திணறுகின்றனர். கல்விக் கடன் பெறுவது கடினமாகியுள்ளது. முதலீடுகளின் வருமானமும் குறைந்துள்ளது.
நிதியமைச்சரின் திசை திருப்பல்
இந்த நெருக்கடி சூழலில் நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் உண்மை நிலையை மூடிமறைக்க முயற்சிக்கிறார். “இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதார மாக இருக்கும்” என்றும், “மூன் றாம் காலாண்டில் வளர்ச்சி மீட்சி பெறும்” என்றும் பொய்யான நம்பிக் கையை விதைக்க முனைகிறார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மதிப்பீடுகளை மாற்றி மாற்றி வெளியிடுவதும், பணவீக்க விகிதங்களை குறைத்து காட்டுவதும், வேலையில்லா திண்டாட்ட புள்ளிவிவரங்களை மறைப்பதும் வரவிருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டே செய்யப்படுகின்றன.
பொருளாதார வல்லுநர்கள் கருத்துப்படி, தற்போதைய நட வடிக்கைகள் போதுமானதல்ல. அடிப்படை சீர்திருத்தங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் உடனடி யாக தேவைப்படுகின்றன. பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே பயன ளிக்கும் இந்த நிதிக் கொள்கை களால் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் சரியும் என்பதே கசப்பான உண்மை.