தில்லியின் ரஃபி மார்க்கில் உள்ள யு.என்.ஐ செய்தி நிறுவன அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதும், அந்த இடத்தை ஆக்கிரமித்ததும் தில்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"புதுதில்லி ரஃபி மார்க்கில் உள்ள யு.என்.ஐ அலுவலகத்திலிருந்து பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய தில்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது.
எந்த முன் அறிவிப்புயில்லாமல் பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றம், தனிப்பட்ட உடைமைகளை எடுத்துச் செல்ல அவகாசம் மறுத்தல் மற்றும் பெண் ஊழியர்கள் உட்படப் பலரும் தவறாக நடத்தப்பட்டது போன்ற போலிசாரின் அடாவடித்தனமாக நடவடிக்கைகள் ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவற்றை நீதிமன்ற உத்தரவின் போர்வையில் நியாயப்படுத்தவும் முடியாது.
ஒரு சுதந்திரமான பத்திரிகை, அச்சுறுத்தலின் கீழ் செயல்பட முடியாது. இதற்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, பத்திரிகையாளர்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
