india

img

ஏப்ரல் 15 வரை வெளிநாட்டவர்கள் இந்தியா வர தடை

கொரோனா வைரசை உலகளாவிய தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை அடுத்து, மார்ச் 13 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை வெளிநாட்டவர்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 114 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 4,624 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,24,171 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரசை உலகளாவிய தொற்று நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சீனாவுக்கு வெளியே கடந்த 2 வாரங்களில் நோய்த் தாக்கம் 13 மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, மார்ச் 13 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை வெளிநாட்டவர்கள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் 6 பேரும், கேரளாவில் 17 பேரும், ஹரியாணாவில் 14 பேரும், மகாராஷ்டிராவில் 11 பேரும் , உத்தரப் பிரதேசத்தில் 11 பேரும், கர்நாடகத்தில் 4 பேரும், ராஜஸ்தான், லடாக் ஆகியவற்றில் தலா 3 பேரும், தெலுங்கானா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 17 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.