கடந்த ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 29 வரை, ரூ.1 கோடி மதிப்புள்ள 10000 தேர்தல் பத்திரங்களை ஒன்றிய அரசு அச்சிட்டதாக ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு எஸ்.பி.ஐ வங்கி பதிலளித்துள்ளது.
தேர்தல் பத்திரம் என்பது ஒரு தனி நபர் அல்லது ஒரு நிறுவனம் விரும்பும், அரசியல் கட்சிக்கு இத்தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கலாம். கடந்த 2018 ஆண்டு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்புகளில் பாரத ஸ்டேட் வங்கியால் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்னையா குமாரின் கேள்விக்கு ஆர்.டி.ஐ மூலம் பதிலளித்த எஸ்.பி.ஐ வங்கி கடந்த ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 29 வரை, ரூ.1 கோடி மதிப்புள்ள 10000 தேர்தல் பத்திரங்களை ஒன்றிய அரசு அச்சிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், இமாச்சலப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அக்டோபர் 1 முதல் அக்டோபர் 10 வரை ரூ.545.25 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையாகி உள்ளதாகவும், பாஜக சார்பில் அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கியதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகி உள்ளது.