india

img

ஆளும் கட்சியின் கைப்பாவை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

புதுதில்லி உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஆளுங்கட்சி யின் கைப்பாவை என உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கடுமையாக விமர்சித்தார். 

“தி வயர்” செய்தி இணைய தளத்தில் பிரபல பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டி யில் துஷ்யந்த் தவே பேசுகை யில்,”உச்சநீதிமன்றம் அதன் சொந்த தீர்ப்புக்கு கட்டுப்படா விட்டால், இந்த உச்சநீதிமன்றம் குடிமக்களை நாளுக்கு நாள் தூக்கி எறியும். அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை  நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 1991  வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் அரசியலமைப்பு பொருத்தத்தை உறுதி செய்தது. அதாவது 15 ஆகஸ்ட் 1947 அன்று இருந்த வழி பாட்டுத் தலங்களின் மதத் தன்மை யைப் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே போல மே 2022 இல் ஞானவாபி மசூதி (வார ணாசி - உ.பி.,) வழக்கிலும் அரசி யல் சாசனத்திற்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்தார். சந்திரசூட் உத்தரவுக்குப் பின் ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்தது. சந்திர சூட்டின் தவறான தீர்ப்பு காரண மாகவே அயோத்தியில் நடந்தது போன்று  ஞானவாபி, மதுரா, சம்பல் மற்றும் ஆஜ்மீர் ஆகிய இடங்க ளில் நிகழ்ந்து வருகிறது. 

மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்

சந்திரசூட் நாட்டில் உள்ள மசூதி களை ஆய்வு செய்ய அனுமதித்த தன் மூலம் அரசியலமைப்பிற்கும், நாட்டிற்கும் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். சந்திரசூட் தனது தீர்ப்பு மூலம் இந்த நாட்டிற்கு பெரும் கேடு விளைவித்துள்ளார் என்று நான் நினைக்கிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறிய தற்காக அவரும் அவரது சகாக்க ளும் குற்றவாளிகள் இல்லையா? சட்டத்தின் ஆட்சியை உடைத்த தற்கு அவர்கள் பொறுப்பல்லவா?” என அவர் கூறினார்.

பாஜகவின் கைப்பாவை

நேர்காணலின் பொழுது மூத்த  வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ”சந்திரசூட் யாரோ ஒருவரின் கை களில் விளையாடுகிறார்” என்று கூறினார். இதற்கு நீங்கள் ஆளும் பாரதிய ஜனதாவைக் குறிப் பிடுகிறீர்களா? என பத்திரிகை யாளர் கரண் தாப்பர் கேட்டார். அதற்கு துஷ்யந்த் தவே,” அதில் சந்தேகமில்லை. சந்திர சூட் பிரதமர் மோடியுடன் இணை ந்து செய்த பூஜை, அயோத்தி தீர்ப்பு தனக்கு கடவுளால் தெரி யப்படுத்தப்பட்டது போன்றவை களால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திர சூட் ஆளும் கட்சியின் கைப்பாவை தான்” என அவர் கூறினார்.

கதறி அழுத துஷ்யந்த் தவே

நேர்காணலின் முடிவில் துஷ்யந்த் தவே அழ ஆரம்பித்தார். அவரது குரல் உணர்ச்சியால் நடுங்கியது, கண்கள் கண்ணீ ரால் நிரம்பியது. அழுதுகொண்டே,‘சம்பல் வன்முறையை நினைத்து நான் தூக்கமில்லாத இரவுகளைக் கொண்டிருக்கிறேன். எனது நாட்டைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். இது என்னை எவ்வளவு பாதிக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. சம்பல் வன்முறை சிறு பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை எவ்வளவு பாதிக்கிறது; என்ன நடக்கிறது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என அழுது கொண்டே கூறினார்.