tamilnadu

தேர்தல்களில் பணமழை பொழியும் பாஜக!

இந்தியாவில் தேர்தல்கள் அனை த்தும் தற்போது கார்ப்பரேட் மய மாகியுள்ளது  என்பது தேர்தல் ஆணை யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

பாஜக மட்டும் மொத்தம் ரூ.1737 கோடி  செலவு செய்துள்ளது. இது நாட்டின் 7  பிரதான கட்சிகள் செலவழித்த தொகை யை விட ரூ.680 கோடி அதிகம். இதில் ரூ.1492 கோடி தேர்தல் பிரச்சாரத்திற்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் 245 கோடி  441 வேட்பாளர்களின் தேர்தல் செல வுக்காக விநியோகிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்தில் பாஜக தெரிவித்துள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் 1264 கோடி மட்டுமே செலவிட்ட பாஜக 2024 தேர்தலில் அதை விட 37 சதவீதம் அதிகம் செலவிட்டுள்ளது. மேலும்  ரூ.611 கோடி பணத்தை விளம்பரங்களுக்காக மட்டும் செலவிட்டுள்ளது.

 காங்கிரஸ் கட்சி 2024 மக்களவை த் தேர்தல், ஆந்திரா, ஒடிசா, அருணாச் சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய சட்டமன்ற தேர்தல்களுக்கு மொத்தம் ரூ.686 கோடி செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.