tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

தில்லி தேர்தல் பிரச்சாரம் பிப்.3 அன்று மாலை 5 மணிக்கே முடிந்து விட்டதில்லையா? இன்று தில்லியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறதல்லவா? வாக்குப்பதிவு நாளின் கடைசி நிமிடம் வரை கூட, வாக்குகளை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் நடப்பதை கேள்வி கேட்க யாரும் இல்லையா? தேர்தல் ஆணையம் எங்கே ?

எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி

மேக் இன் இந்தியா திட்டம் நல்ல முயற்சி என்றாலும் அது தோல்வி அடைந்து விட்டதை  பிரதமர் மோடி  ஒப்புக்கொள்ள வேண்டும். 2014 இல் 15.3 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது  12.6  சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குறைவு.

சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அஜித் பிரசாத்

பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. பாஜவினர் அராஜகம் செய்கின்றனர். இதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக அனைத்தையும் செய்கிறது.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபில்

இந்தியா கல்வியறிவு பெற்றால் மட்டுமே மாற்றமடையும் என நினைக்கின்றேன். இந்தியா இப்போது கல்வியறிவு பெறவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை நமது அரசியல் கறைபடிந்ததாகவே இருக்கும்.இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.