tamilnadu

வங்கதேச துணைத் தூதரகம் மீண்டும் திறப்பு

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் உள்ள துணைத் தூதரகத்தில் புதன்கிழமை (பிப். 5) முதல் விசா மற்றும் தூதரக சேவைகளை மீண்டும் துவங்கு வதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் சின்மோய் கிருஷ்ணா தாஸ் என்ற ஹிந்து மத அமைப்பின் தலைவர் கைது  செய்யப்பட்டதை பயன்படுத்தி, அகர்தலா வில் மத உணர்வுகளை தூண்டுவதற்காக வங்கதேச துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் இந்துத்துவா அமைப்புகள் ஈடுபட்டன.

 இந்த சம்பவத்தை தொடர்ந்து 2024  டிசம்பர் 3 முதல், அகர்தலா துணை தூதரக சேவைகளை வங்கதேச அரசு நிறுத்தி யது. மேலும் துணை தூதர் ஆரிஃப்  மஹமத்  திரும்பி அழைத்துக்கொள்ளப் பட்டார்.

இந்நிலையில், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு  புதனன்று (பிப். 5 ) முதல் விசா மற்றும் தூதரக சேவை களை மீண்டும் தொடங்குவதாக வங்க தேச அரசு அறிவித்துள்ளது.