india

img

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

மக்களவைத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் 2 புதிய தேர்தல் ஆணையர்களை, ஒன்றிய பாஜக அரசு அவசர அவசரமாக தேர்வு செய்துள்ளது.  புதிய தேர்தல் ஆணையர் களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரின் பெயர்களும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு வியாழனன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும், புதிய தேர்தல் ஆணையர்களின் நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிதாக நியமனம் செய்யப்பட்ட தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.