சென்னை, ஆக. 7- உதவி தனி அதிகாரி தேர்வில் நடைபெற்ற முறை கேடுகள் குறித்து டி.ஆர். இ.யூ. செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து முறையிட்டார். அந்த கடிதத்தில் கூறி யிருப்பதாவது: 70 விழுக்காடு பதவி உயர்வு மூலம் நிரப்பப்ப டும் உதவி தனி அதிகாரி களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 27.4.2019, 26.5.2019 அன்று நடைபெற்றது. தேர்வு முடிவு ஜூலை மாதம் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு முன்பு 2013 ம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்வுகளில் பெயர் கொடுத்த பின்பு தேர்வு எழு தாதவர்களும் இம்முறை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளனர்.
இப்படி 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்பு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற பல மூத்த ஊழியர்கள் தேர்ச்சி பெறவில்லை என அறிவித் துள்ளனர். தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே யார்? யார் ?தேர்ச்சி பெற்றார் கள் என்ற விவரம் கசிய விடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நடை பெற்ற தேர்வில் பாரபட்ச மாக ஒரு சிலருக்கு சாதக மாக அதிக மதிப்பெண்கள் வழங்கி விஜிலென்ஸ்சில் விசாரணைக்கு உள்ளாக் கப்பட்டுள்ள அதிகாரிதான் இந்த முறையும் விடைத் தாளை திருத்தியுள்ளார். (அவர்தான் சிபிஓ அட்மின் அதிகாரி) அவர் சந்தேகத் திற்கு உள்ளாக்கப்பட்டவர். இந்த தேர்வு குறித்து ஏராள மான ஆர்.டி.ஐ. விண்ணப் பங்கள் வந்துள்ளன. 20 பேர் புகார் அளித்துள்ளனர். எனவே விடைத்தாளை வேறு ரயில்வேயில் உள்ள அதிகாரியை வைத்து திருத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது. பொதுமேலாளரை சந்திக்கும் போது டி.ஆர். இ.யு துணைத் தலைவர் ஆர். இளங்கோவன், இணை பொதுச் செயலாளர் வெங் கட்ராமன், வி.அரிலால் ஆகி யோர் உடனிருந்தனர்.