புதுதில்லி:
சீனாவுக்கு வெளியே கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக இத்தாலிமாறியுள்ளது. அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானோரை இந்த உயிர்க்கொல்லி வைரஸ் பலி கொண்டு வருகிறது.
இத்தாலியில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போது வரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்தொற்று உள்ளது உறுதி செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நகரமான பெர்காமாவிலிருந்து வெளியாகும், ‘லிகோ டி பெர்காமா’என்ற நாளிதழில் வெளியிடப் படும் மரண அறிவிப்பு விளம்பரங்களின் எண்ணிக்கை பலமடங் காகி உள்ளது.
‘லிகோ டி பெர்காமா’ நாளிதழில், கடந்த மார்ச் 9-ஆம் தேதி அரைப் பக்க அளவிற்கே, இறந்தவர்கள் பற்றிய மரண அறிவிப்பு விளம்பரங்கள் வெளியாகி இருந்தன. ஆனால், அந்த விளம்பரங்களின் எண்ணிக்கை கடந்த 13-ஆம்தேதிக்குப் பிறகு 10 பக்கங்களுக் கும் மேலாக அதிகரித்துள்ளது.கொரோனாவின் கோரத் தாண்டவம் எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறது என்பதற்கு, ‘லிகோ டி பெர்காமா’ நாளிதழில் வெளியாகும் மரண அறிவிப்பு விளம்பரங்களே சாட்சியாக மாறிவருகின்றன.