மணிப்பூர் செப்:10, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கிடையே வெடித்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது வீடுகள் இடிக்கப்பட்டு தீய்க்கு இரையாகின அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகவும் கோரமான முறையில் அரங்கேறின ஆனால் இதுகுறித்து இந்த நிமிடம் வரை நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வாய் திறக்கவில்லை.
இன்னும் அங்கு நிலைமை சரிசெய்யப்படாத நிலையில் மீண்டும் கலவரம் பூதாகரமாவ வெடிக்கத் துவங்கியுள்ளது அதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.