india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கவுன்ட்டர் பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையின் படி 5 ஜி மொபைல் சந்தையில் சீனா முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில்,  இந்தியா  முதன் முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளது. 2ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 25 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். பதிவான 7,74,462 வாக்காளர்களில் 3,87,778 பெண்கள், 3,86,654 ஆண்கள், 30 பேர் மூன்றாம் பாலினப் பிரிவின் கீழ் தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஓநாய்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து அச்சுறுத்தல்களில் இருந்து கிராம மக்களை பாதுகாப்பதற்காக பஹ்ரைச் கிராம நிர்வாகம் தற்காலிக தங்குமிடங்களை உருவாக்கியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு வேளாண் கல்லூரி மாணவர்கள் 9 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்ததால் 30 மாணவர்களுக்கு சோதனை நடத்தி யதில் 9 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதியானது.

“ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற் காக ஏமாற்றினார்; கடவுள் அவரை தண்டித்ததால், அவரால் போட்டியில் பதக்கம் வெல்ல முடிய வில்லை” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட இந்திய அணியை அனுமதிப்பது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,”பாகிஸ்தானில் தீவிரவாதம் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் வரை அந்நாட்டுக்கு ஆதரவாக எந்தவொரு செயலிலும் ஈடுபடப் போவதில்லை” என கூறினார். இதனால் வரவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட பாகிஸ்தா னுக்கு இந்திய அணி செல்லாது என உறுதியாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

“அசாமில் ஆதார் அட்டைக்கு புதிதாக விண் ணப்பிப்பவர்கள் அனைவரும் தங்கள் என்ஆர்சி விண்ணப்ப ரசீது எண்ணை (ஏஆர்என்) சமர்ப்பிக்க வேண்டும்” என்று அம்மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

இந்திய நிர்வாக சேவையிலிருந்து பூஜா கேத்கரை (பயிற்சி ஐஏஎஸ்) பணி நீக்கம் செய்தது ஒன்றிய அரசு.