india

img

ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் மாற்றம்!

ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

ஒன்றிய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, கொலிஜியம் குறித்துத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். அவருடைய கருத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தொடங்கிப் பல நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவரது இலாக்கா பறிக்கப்பட்டுள்ளது. தற்போது கிரண் ரிஜிஜு புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேவாலுக்கு, ஒன்றிய சட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.