ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 சட்டமுன்வரைவுகளை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான அரசமைப்பு திருத்தச் சட்டம், உள்ளாட்சித் தேர்தல்களை, மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களுடன் இணைந்து நடத்த புதிய அரசமைப்புப் பிரிவை உருவாக்கும் சட்டம் (இதற்கு 50% மாநிலங்கள் ஒப்புதல் அவசியம்), யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை பதவிக்காலத்தை மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலத்துடன் ஒருங்கிணைக்கும் சட்டம் ஆகியவற்றை கொண்டுவர முடிவு.
வருகிற குளிர்காலக் கூட்டத் தொடர் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்களை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளன.