india

img

PM-JAY சுகாதாரத் திட்டத்தில் மோசடி! - சி.ஏ.ஜி அறிக்கை

ஆயுஷ்மான் பாரத் - பிரதன் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தில் மோசடி நடந்துள்ளது என்பது மத்திய தலைமை கணக்குத் தணிக்கை (சிஏஜி) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, ஆயுஷ்மான் பாரத் - பிரதன் மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தில் கீழ் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இறந்த பிறகும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தரவுகள் காட்டப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் ஒரு நோயாளி, பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தரவுகள் காட்டப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே செல்போன் எண்ணின் கீழ் பதிவு செய்துள்ளனர் என்று சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களின் பட்டியலில் 8888888888, 900000000, 20, 1435, 185397 ஆகியவை உள்ளன. 

9.85 லட்சம் பயனாளிகள் '3’ என்ற எண்ணின் கீழும், 7.49 லட்சம் பயனாளிகள் '999999999’ என்ற எண்ணின் கீழும், 1.39 லட்சம் பயனாளிகள் '8888888888’ என்ற எண்ணின் கீழும், 96,000 பயனாளிகள் '9000000000’ என்ற செல்போன் எண்ணின் கீழும் பதிவு செய்துள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது.