புதுதில்லி 90 தொகுதிகளைக் கொண்ட ஹரி யானா மாநிலத்திற்கு அக்டோ பர் 5 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதி களுக்கு 3 கட்டமாக (செப்., 18, செப்., 25, அக்., 1) சட்டமன்ற தேர்தல் நடைபெற வுள்ளது. இந்நிலையில், இந்த 2 மாநில தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவு களை, பிரபல கருத்துக்கணிப்பு நிறுவன மான லோக் போல் (lok poll) வெளி யிட்டுள்ளது.
ஹரியானா
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியை இழக்கும் என லோக் போல் நிறு வனம் தனது கருத்துக்கணிப்பில் கூறி யுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவு களில் காங்கிரஸ் 58 முதல் 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்றும், பாஜக 20 முதல் 29 இடங்களை மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என்றும், மற்ற கட்சிகள் 3 முதல் 5 இடங் களை வெல்லும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 20 இடங்கள் கூடுதலாக வென்று ஆட்சியை கைப்பற்றும் என லோக் போல் நிறு வனம் கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 90 தொகுதி களில் பெரும்பான்மைக்கு 46 தொகுதி கள் தேவை என்ற நிலையில், தேசிய மாநா ட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி - பேந்தர்ஸ் கட்சி உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி 51 முதல் 56 தொகுதி களை வென்று ஆட்சியை கைப்பற்றும் என லோக் போல் நிறுவனம் தனது கருத்துக் கணிப்பு முடிவில் கூறியுள்ளது. பாஜக 23 முதல் 26 தொகுதிகளிலும், மக்கள் ஜன நாயக கட்சி 4 முதல் 8 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 3 முதல் 7 தொகுதிகளிலும் வெல்லும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் எம்விஏ கூட்டணி ஆட்சி
ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன், இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான லோக் போல் கருத்துக்கணிப்பில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் (சரத்) - சிவசேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய “எம்விஏ (மகா விகாஸ் அகாடி)” கூட்டணி 141 முதல் 154 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. அதே போல தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக - தேசியவாத காங்கிரஸ் (அஜித்) - சிவசேனா (ஷிண்டே) ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 115 முதல் 128 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என்றும், மற்றவை 5 முதல் 18 தொகுதிகளை வெல்லும் என லோக் போல் நிறுவனம் தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கைப் பற்ற 145 இடங்கள் தேவை என்ற நிலையில், எம்விஏ கூட்டணி 9 இடங்கள் கூடுதலாகவே வென்று ஆட்சி அரியணையில் அமரும் என லோக் போல் நிறுவனம்கூறியுள்ளது.