சேட்டை செய்தாக கூறி மாணவனை ஒரு காலை பிடித்து மாடியிலிருந்து தொங்கவிட்டு மிரட்டிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், மிர்ஸாபூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார் சோனு என்ற மாணவர். இந்நிலையில், நேற்று பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது சக மாணவர்களிடம் சோனு அதிகமாகக் குறும்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வகர்மா, சோனுவை பள்ளியின் முதல் மாடியிலிருந்து தலைகீழாகத் தொங்கவிட்டு அச்சுறுத்தியுள்ளார். இதைப்பார்த்து சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் மாணவர் மன்னிப்பு கேட்ட பிறகே தலைமை ஆசிரியர் அம்மாணவனை விடுவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவியதால் தற்போது தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.