புதுதில்லி,அக்.02- இந்தியாவில் இந்த ஆண்டில் இயற்கை பேரிடர்களால் 1,492 உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
கனமழை வெள்ளத்தால் 895 பேரும், மின்னல் தாக்கி 597 பேரும் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில் இதுவரை 934.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு தென்னிந்திய பகுதிகளில் 112% அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.