india

img

ரூ. 4.75 கோடி மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்து பதுக்கல்..... பாஜக முன்னாள் முதல்வர் பட்நாவிஸ் மீது வழக்கு பதிவு....

மும்பை:
ரூ. 4 கோடியே 75 லட்சம்ரூபாய் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கியதுதொடர்பாக பாஜக முன்னாள்முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது மகாராஷ்டிர அரசுவழக்கு பதிவு செய்துள்ளது.மூச்சுத் திணறல் ஏற்படும் அளவுக்கு தீவிர கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, ரெம்டெசிவிர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. இதன்மூலம் பல லட்சம் பேர் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் வது, பதுக்கி வைப்பது ஆகியநடவடிக்கைகளால் இந்த மருந்துக்கு சமீப காலமாக தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில்தான், குஜராத் நிறுவனத்தில் இருந்து ரூ.4 கோடியே 75 லட்சம் மதிப்பிலான ரெம்டெசிவிர் மருந்தை ரகசியமாக வாங்கிபதுக்கி வைத்திருந்த மகாராஷ்டிரா மாநில பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மீது, சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய- ஆளும் மகா விகாஸ் அகாதி கூட் டணி அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

யூனியன் பிரதேசமான ‘டாமன்’ பகுதியில் உள்ள ‘ப்ரக் பார்மா’ ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து மும்பையில் உள்ள ஒருகிடங்கில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை தடையை மீறி அரசுக்கு தெரியாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக மும்பைபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்தின் இயக்குநரை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது, அந்நிறுவனத் தின் சார்பில் திடீரென பாஜகமுன்னாள் முதல்வர் பட்நாவிஸ் ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்தே ரெம்டெசிவிர் மருத்துப் பதுக்கலில் ஈடுபட்டவர் பட்நாவிஸ்தான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.