நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சிக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் வாராந்திர புள்ளிவிவர அறிக்கையின்படி, மார்ச் 11 ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு மதிப்பு 9.64 பில்லியன் டாலர் அளவிற்கு சரிந்து, 622.27 பில்லியன் டாலராக இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது கிட்டதட்ட 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் 11.108 பில்லியன் டாலராக குறைந்து 554.359 பில்லியன் டாலராக உள்ளது.
அதனைதொடர்ந்து இந்தியாவின் அந்நிய செலாவணி சொத்துக்களில் சரிவு ஏற்பட ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மார்ச் 7 ஆம் தேதி இதுவரை இல்லாத அளவாக 77.02 ரூபாயாக வீழ்ச்சிக் கண்டது.
இந்த நிலையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்த அதிக அளவு அமெரிக்க டாலர்களை விற்பனை செய்து ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை குறைத்துள்ளது. இதனால் 77.02ஆக இருந்த ரூபாய் மதிப்பு தற்போது 75.95ஆக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.