கொல்கத்தா:
ஒன்றிய அரசின் அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (Union Public Service Commission - UPSC) கடந்த ஆகஸ்ட் 8 அன்று ஒன்றிய ஆயுதக் காவல்படை (CAPF), எல்லைப் பாதுகாப்புப் படை(BSF), ஒன்றிய அரசின் ரிசர்வ் காவல் படை(CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) ஆகியவற்றில் உதவிக்கமாண்டண்ட் பணிகளுக்கான தேர்வை நடத்தியது.
200 மதிப்பெண்களுக்கான இந்த எழுத்துத் தேர்வில் 6 கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. தேர்வை எழுதுவதற்கு 3 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், யுபிஎஸ்சி வினாத் தாளில் இடம்பெற்ற 6 கேள்விகளில் 4 கேள்விகள் சர்ச்சைக்கு உரியதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நிலைபாட்டை ஒப்புக் கொண்டு, மாணவர்கள் அதனை ஆதரித்துஎழுதும்படியும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\மேற்குவங்கத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்தும், தில்லியில் ஏற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர் நெருக்கடி குறித்தும் கேள்விகள் கேட்கப் பட்டு உள்ளன. இவை இரண்டுமே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள். மேலும், விவசாயிகள் போராட்டம் அரசியல் உள் நோக்கம் கொண்டது.. மாநிலங்களில் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்... என்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதுமாறும் கூறப்பட்டுள்ளது.ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ்அமைப்புகளின் குரல்களை எதிரொலிக் கும் இந்த கேள்விகள் அனைத்தும் அதிகமதிப்பெண்களுக்கு உரியவை ஆகும்.
இதன்மூலம், தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பான யுபிஎஸ்சி, பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸின் தேர்வாணையப் பிரிவாக மாறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.குறிப்பாக, யுபிஎஸ்சி தேர்வில் மேற்குவங்க தேர்தல் வன்முறை பற்றி கேள்விகேட்கப்பட்டதற்கு அம்மாநில முதல்வர்மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.“ஒன்றிய அரசின் ஆயுதப் படை காவல்பணிகளுக்காக யுபிஎஸ்சி நடத்திய தேர்வில்மேற்கு வங்க தேர்தல் வன்முறை பற்றி 200வார்த்தைகளுக்கும் மிகாமல் எழுதுமாறுகூறப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்குஎதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி தன்னாட்சி அதிகாரம் உடையது. ஆனால் இப்போது ஒன்றிய அரசின்ஆயுத காவல் படைகளுக்கான தேர்வுக்கு பாஜக அலுவலகத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று மம்தா சாடியுள் ளார்.