india

img

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை!

காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷரோன் ராஜ் கொலை நடந்து 73 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கிரீஷ்மா, கொலை நடப்பதற்கு 10 மாதங்களுக்கும் மேலாக ஷரோனைக் கொலை செய்ய திட்டம் தீட்டி, கூகுளில் பல விஷயங்களைத் தேடி தனது திட்டத்தை வகுத்துள்ளார். இதில், கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமரன் நாயருக்கும் பங்கிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷரோன் ராஜ் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த கிரீஷ்மா மற்றும் அவரது உறவினர் ஆகியோர் குற்றவாளிகள் என்றும், கிரீஷ்மாவின் தாய்க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்தும் விசாரணை நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருக்கும் இருவருக்குமான தண்டனை விவரத்தை நீதிமன்றம் இன்று(ஜன.20) பிறப்பித்துள்ளது. அதில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், உறவினருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுளள்து.