கொச்சி:
தூதரக பாதுகாப்பு பெற்ற பார்சல்களில் தங்கம் கடத்தியதற்காக, யுஏஇ துணைத் தூதர் மற்றும் அட்டாசே ஆகியோருக்கு சுங்கவரித்துறையால் விசாரணை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நோட்டீஸ்கள் முன்னாள் தூதரக ஜெனரல் ஜமால் ஹுசைன் அல் சபி மற்றும்முன்னாள் அட்டாசே ரஷித் கமிசி ஆகியோருக்கு வெளியுறவு அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டது. பேரீச்சம் பழம் மற்றும் மத நூல்களை துணைத் தூதரகம் விநியோகம் செய்தது குறித்தும் சுங்கத்துறை நோட்டீஸ்அனுப்ப தயாராகி வருகிறது. இந்த வழக்கின்முக்கிய குற்றவாளிகள் இருவர் தங்க கடத்தலில் இவர்கள் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். விசாரணை முகமைகள் அவர்களை விசாரிக்க ஒன்றிய அரசின் அனுமதியை கோரினாலும் கிடைக்கவில்லை. 95 கிலோ தங்கம் கடத்தப்பட்டது, துணை தூதர் மற்றும் அட்டாசேக்கு தெரியும் என்பதை சுங்கத்துறை கண்டறிந்தது. முதல் குற்றம் சாட்டப்பட்ட பி.எஸ்.சரித், துணை தூதரும், அட்டாசேவும் தங்கத்தை கடத்தி வந்ததாக கூறினார். தூதரக பார்சல்கள் வழக்கமாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பெண்களால் கொண்டு வரப்பட்டதாகவும், ஒன்று அல்லது இரண்டு பைகள் பெண்களால்நேரடியாக தூதரகத்திற்கு வழங்கப்பட்ட தாகவும் கூறியிருந்தார். கனமான இந்த பைகளை கையாள வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. சரித்தின் கூற்றுப்படி, விமான நிலையத்தில் இருந்து பெண்கள் கொண்டு வந்த பொருட்களை பெறுவதில் கால தாமதம்செய்ததற்காக தன்னை தூதரக அதிகாரி கடிந்து கொண்டதாகவும் சரித் கூறியிருந்தார். பைகளில் உணவுப்பொருட்கள் இருப்பதாக தூதர் கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தங்கக் கடத்தலுக்கு 1,000 டாலர் வீதம் தூதர் கொடுத்துள்ளார். இந்த பரிமாற்றங்கள் பிறருக்கு தெரியாமல் இருக்கவும் பிடிபட்டால் தூதரின் பெயரை கூறாமல் இருக்கவும் இந்த சிறிய தொகை அளிக்கப்பட்ட தாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். ஒரு ஒழுங்கு நடவடிக்கையின் பகுதியாக தூதரும் அட்டாசேயும் திருவனந்தபுரத்திற்கு வந்ததாக சரித் வாக்குமூலம் அளித்துள்ளார். இருவரும் முன்பு வியட்நாமில் வேலை செய்யும் போது கடத்தலில் சிக்கினர். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விலை உயர்ந்த சிகரெட்டுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் வந்தபிறகும், அத்தகைய பொருட்கள் தூதரகத்திலிருந்து பீமாப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன.ராஸ் அல் கைமாவில் தூதர் ஒரு வீட்டைக் கட்டினார். இதற்கான ஒப்பந்ததாரர், எகிப்துக்காரர் பணத்துடன் தலைமறைவானதாகவும், அதன் பின்னர் பணம் திரட்டஎந்த வழியையும் தேடிக்கொண்டிருப்ப தாகவும் தூதர் சொன்னதாக சரித் வெளிப்படுத்தினார். தங்க கடத்தல் வழக்கில் இவர்கள் இருவரையும் குற்றவாளி பட்டியலில் இணைக்காதது குறித்து பலமுறை நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. தங்கம் கடத்தல் மற்றும் டாலர் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டின ரும் ஆரம்பத்திலேயே நாட்டை விட்டு வெளியேறினர்.