india

img

கேரளத்தில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி..... -யைத் தொடர்ந்து ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பும் உறுதிப்படுத்துகிறது.....

புதுதில்லி:
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் என்று என ஐஏஎன்எஸ், சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இடது ஜனநாயக முன்னணி 40.1 சதவிகித வாக்குகளையும் 87 இடங்களையும் வெல்லும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் வாக்கு 32.6 சதவிகிதமாக குறையும். அதிகபட்சம் 51 இடங்களை அந்தக் கூட்டணி பெறும். 2016 தேர்தலுடன் ஒப்பிடும்போது, 6.2 சதவிகிதம் வாக்கு குறைவாக இருக்கும். பாஜக 12.7 சதவிகித வாக்குகளையும் அதிகபட்சமாக ஒரு இடத்தையும் வெல்லும் என்று ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

8796 வாக்காளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 38.7 சதவிகிதம் பேர் பினராயி விஜயன் முதல்வராக தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்.தமிழகத்தில், இடதுசாரிகள் உள்ளிட்ட  திமுக தலைமையிலான கூட்டணி 158 இடங்களை வென்று ஆட்சிக்கு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 62 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும். மேற்கு வங்கத்தில், திரிணாமுல் 155 இடங்களுடன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். அதே நேரத்தில் பாஜக 100 இடங்களையும் இடது கூட்டணி 35 இடங்களையும் வெல்லும்.

அசாமில், என்டிஏவும் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அணியும் சம பலத்தில் உள்ளன. ஆனால் என்டிஏ வுக்கு 72 இடங்களும் எதிர்க்கட்சி அணிக்கு 47 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளன.24 சேனல் நடத்திய கேரள தேர்தல் கணிப்பின் இரண்டாம் கட்டமும் எல்டிஎப் வெற்றியை உறுதி செய்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி 77 இடங்களை வெல்லும் என்று கூறியுள்ள அந்த கணிப்பு, பினராயி விஜயன் முதலமைச்சராக தொடர வேண்டும் என்று பெரும்பான்மையினர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளது.