india

img

அய்யங்காளி வேலை உறுதி திட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.... கேரள அமைச்சர் எம்.வி. கோவிந்தன் அறிவிப்பு....

திருவனந்தபுரம்:
“அய்யங்காளி நகர வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் படித்த இளைஞர்களையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கேரள உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் கலால் துறை அமைச்சர் எம்.வி. கோவிந்தன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்றுப் பாதிப்பைத் தொடர்ந்து வேலையற்ற இளைஞர்களுக்கு வருமானத்தை உறுதி செய்வதற்காக இந்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் தனியார் நிறுவனங்களில் பயிற்சியாளர் பணி வழங்கும் தொழில்முனைவோருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாத ஊதிய மானியம் வழங்கப்படும்.

முந்தைய நிலைமை என்னவென்றால், பயிற்சி பெறும் இளைஞர் களுக்கு பணம் கிடைக்காது. ஆனால்,தற்போது அய்யங்காளி வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், தொழில்முனைவோர் வங்கிக் கணக்குகள் மூலம் உழைக்கும் இளைஞர் களுக்கு ஊதியம் கிடைக்கும்” என்றுஅமைச்சர் கோவிந்தன் மாஸ்டர் கூறியுள்ளார்.மேலும், “இதுபோன்ற புதுமையான நடவடிக்கைகளை மேற்கொள் வதன் மூலம் கோவிட் காலத்தில் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள நிதி
நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம்முயற்சிப்பதாகவும், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் வேலையற்றஇளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் நிவாரணம் அளிக்கும்” என்றும் கோவிந்தன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.