பெங்களூரு:
தடுப்பூசி போதிய அளவில் உற்பத்தி செய்யப்படாததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் செலுத்தப்படும், கோவாக்சின், கோவிஷீல்ட்ஆகிய இரு தடுப்பூசிகளுக்குமே பற்றாக்குறை உள்ளது. இதுதவிர ரெம்டெசிவிர்போன்ற தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், தடுப்பூசி என்று கூறியவுடனேயே தடுப்பூசி வந்துவிடுமா? அதை உற்பத்தி செய்ய வேண்டாமா? என்று ஆத்திரப்பட்டுள்ளார்.‘நாட்டில் ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நீதிமன்றங்கள் கருத்து தெரிவிக்கின்றன. ஆனால், நான் உங்களிடம் (நிருபர்களிடம்) ஒன்றைக் கேட்கிறேன்.. குறிப்பிட்ட அளவு தடுப்பூசிகளை நாளை தயாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த அளவுஎங்களால் தயாரிக்க முடிய வில்லை என்றால், நாங்கள் என்னதூக்கில் தொங்க வேண்டுமா?’ என்று எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘நடைமுறையில் சில விஷயங்கள் எங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கின்றன. எனினும், மக்களுக்குத் தேவையான தடுப்பூசி தட்டுப்பாடின்றிக் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.