ஸ்ரீநகர்:
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்திற்கு வந்துள்ள தலிபான்கள், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படியே தாங்கள் ஆட்சிநடத்த உள்ளதாக அறிவித் துள்ள நிலையில், “தலிபான் கள் உண்மையான ஷரியத் சட்டத்தைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
“உண்மையான ஷரியத் சட்டத்தில் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் தலிபான்களுக்கு அவர் சுட டிக்காட்டியுள்ளார்.இதுதொடர்பாக மெகபூபா முப்தி மேலும்கூறியிருப்பதாவது:“தலிபான்கள் இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளனர், அதுதான் உண்மை. அவர்களின் முதல் ஆட்சிக் காலம் மனித உரிமைக்கு எதிரானதாக இருந்தது. ஆனால், இப்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆள விரும்பினால், அவர்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ள உண்மையான ஷரியத் சட்டத்தைப் பின்பற்றவேண்டும். அது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உரிமைகளை உறுதிசெய்யும். மதீனாவில் இருந்த முகமது நபியின் ஆட்சியைத் தலிபான்கள் பின்பற்றினால், அதுஉலகிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும். மேலும், தலிபான்கள் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றால் இஸ்லாம்மற்றும் ஷரியத் சட்டத்திற்கு அளிக்கும் கடுமையான விளக் கத்தைத் தவிர்க்க வேண்டும் இல்லையென்றால், அதுஆப்கானிஸ்தான் மக்களுக்குவிஷயங்களைக் கடினமாக் கும்.” இவ்வாறு மெகபூபாமுப்தி கூறியுள்ளார்.