india

img

‘காக்டெய்ல்’ கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி...

ஹைதராபாத்:
கொரோனா தடுப்பு மருந்தான  ‘காக்டெய்ல்’ மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதனால் ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் அழிக்கப் படும் என்று ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனையின் தலைவர் தெரிவித்தார்.கொரோனா அறிகுறிகள் லேசானது முதல் மிதமானது வரை உள்ள நோயாளிகளுக்கு இம்மருந்தை கொடுக்கலாம். இந்த மருந்து, நோயாளிமருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான தேவையை 70 சதவீதம் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஏஐஜி மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் டி.நாகேஷ் வர் ரெட்டி கூறியதாவது:மோனோக்ளோனல் முறையில் ஆன்டிபாடி காக்டெய்ல் பயன்படுத்துவதால், கொரோனா  நோயாளிகள் கோவிட் தொடர்பான சிக்கல்களில் இருந்து தப்ப முடியும். இந்தியாவில் அதன் பயன்பாட்டிற்கு மத்திய அரசுஒப்புதல் அளித்துள்ளது. இம்மருந்தைபயன்படுத்துவதால், ஒரு வாரத்திற் குள் கொரோனா நோயாளிகள் தொற் றில் இருந்து மீள்வார்கள். மேலும், ஆர்டி-பிசிஆர் டெஸ்டில் நெகடிவ் ரிசல்ட் வரும். மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளின் உண்மையான ஆதாரங்கள் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் உட்பட மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வுகள், ‘காக்டெய்ல்’ மருந்தை பயன்படுத்த அனுமதித்து ஊக்கமளிக்கின்றன. இம்மருந்தை மருத்துவமனையில் அனுமதிப்பதால், நோயாளியின் மரணத்தை 70 சதவீதத்திற்கும் மேலாக குறைக்க முடியும். இரண்டு மோனோகுளோனல் ஆன்டிபாடிகள், ஒரு காக்டெய்ல் மருந்தில் உள்ளது.

இந்த மோனோகுளோனல் ஆன்டிபாடிகள் செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, குறிப்பிட்ட நோயைஎதிர்த்துப் போராடுவதற்காக வடிவமைக்கப்பட்டவை. இரண்டு ஆன்டிபாடிகளை வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன், இருதயபிரச்சனைகள், நோய் எதிர்ப்பு சக்திமருந்துகளை உட்கொள்வோர் பயன் படுத்தலாம். இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் 55 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம்.இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த சிகிச்சை முறையை அனுமதிக்கக் கூடாது. இந்த சிகிச்சைக்குப்பிறகு, தொற்றில் இருந்து குணமடையும் நோயாளிகள், அவர்கள் தடுப்பூசிபோடுவதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆன்டிபாடி காக்டெய்லை குறிப்பிட்ட மருத்துவமனையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.