india

img

கொரோனா விதிகளை மீறி குஜராத்தில் கோயில் திருவிழா..... ஒருவருக்கொருவர் குடங்களுடன் முண்டியடித்த பக்தர்கள்....

அகமதாபாத்:
கொரோனா தொற்றுப் பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் மத வழிபாட்டு தலங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் இந்த விதிமுறைகள் தொடர்ந்து மீறப்பட்டுவருகின்றன. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பல லட்சம் பேர் கூடிய கும்பமேளாவுக்கு பகிரங்கமாகவே மாநில பாஜகஅரசு அனுமதி வழங்கியது. இதுவே, நாடு முழுவதும் கொரோனா இவ்வளவு தீவிரமாக பரவுவதற்கு காரணம் என்றுபல தரப்பினராலும் குற்றம் சாட் டப்பட்டு வருகிறது. ஆனால், அதன்பிறகும் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தில் ‘சார்தாம் மத யாத்திரை’க்குஅனுமதி வழங்கப்பட்டது. பின்னர் எதிர்ப்புகள் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்தான், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம் சனந்த் தாலுகாவில் உள்ள பலியாதேவ் கோயிலில் பெண்கள் பெருங்கூட்டமாக திரண்டு குடங்களில் புனிதநீரேந்தி வழிபாடு நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் பால் குடம்எடுப்பது போன்ற இந்த நிகழ்ச்சியில், பல ஆயிரம் பேர் முகக்கவசமோ, தனிமனித இடைவெளியோ எதையும் பின்பற்றாமல் தலையில் குடங்களுடன் முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடந்த இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தனுஷின் ‘அனேகன்’ படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் உள் ளிட்ட பிரபலங்கள் பலரும் இந்தசம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நவபுரா கிராமத்தைச் சேர்ந்த 23 பேர் மீது போலீசார், தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடவுள்கள் மிகுந்த கோபத்தில் இருப்பதால்தான், நாட்டில் கொரோனா பரவுகிறது என்று சாமியார் ஒருவர் கூறியதைக் கேட்டே பெண்கள் இவ்வாறு கூட்டம் கூட்டமாக வந்து வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.