கைரசன்:
உத்தர்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 45 இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர்கண்டில் நைஜினார், அல்குமோகா, தேறி, பௌரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக காட்டுத்தீயை அணைக்க தீவிரநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தீயை கட்டுக்குள் கொண்டு வர2 ஹெலிகாப்டர்களும் தேசிய பேரிடர்மீட்புக் குழுக்களும் மத்திய அரசால் உத்தர்கண்ட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீ அதிகம் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் உத்தர்கண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தர்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதாகவும், கடந்த6 மாதத்தில் சுமார் 1,000 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மேலும், காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 1,292 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன; ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.