புதுதில்லி:
“உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு அடுத்தாண்டு தேர்தல்நடைபெறவுள்ள நிலையில், துணைமுதல்வர் பதவியை எங்களுக்கு ஒதுக்குவதாக பாஜக உறுதி அளித்திருக்கிறது” என்று நிஷாத் கட்சித் தலைவர் சஞ்சய் நிசாத் கூறியுள்ளார்.
அவ்வாறு தராவிட்டால் “பாஜகவை நிம்மதியாக இருக்கவிட மாட்டோம்” என்றும் அவர்பகிரங்கமாக எச்சரிக்கை விடுத் துள்ளார்.தில்லியில் ஒன்றிய உள்துறைஅமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, சஞ்சய் நிஷாத், செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பாஜகவிடம் 160 தொகுதிகள் கேட்டிருக்கிறோம். அவர்களும் துணை முதல்வர் பதவி, மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஆகியவற்றைத் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். பாஜக வெற்றி பெற்றால் நான்தான் துணை முதல்வர். அதில்எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் பாஜக இந்தவாக்குறுதிகளை கொடுத்துள் ளது. ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்று இந்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றாமல் போனால் நிச்சயமாக அந்த கட்சியை நிம்மதியாக இருக்க விடமாட்டோம்” என்று கூறியுள்ளார்.நிஷாத் கட்சி, மீனவ மக்களை பிரதிநிதித்துவம் செய்யும்கட்சியாக பார்க்கப்படுகிறது. உ.பி.யில் சுமார் 50 தொகுதிகளின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மீனவ மக்களின் வாக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.