புதுதில்லி:
தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின்பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக ஜூன் 17 அன்று தில்லி வந்துள்ளார்.
பிரதமரைச் சந்திப்பதற்காக தனி விமானம் மூலம் 2 நாள் பயணமாக தில்லி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர்கள் தங்கும் தமிழக இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டதமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் தில்லி பட்டாலியன் போலீசார் அரசுமரியாதை அளித்தனர். அதனை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். பின்னர் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழகநீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் தில்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.