districts

img

அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, நவ.28- பள்ளிக்கல்வித் துறை யின் 2022-23-ஆம் ஆண்டிற்  கான மானியக் கோரிக்கை யில், அரசுப் பள்ளிகளில் பயி லும் மாணவர்களின் அறிவி யல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமா டும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்களை 25 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், ரூ. 25 கோடி மதிப்பிலான ‘‘வான வில் மன்றத்தை’’ தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று  திருச்சி மாவட்  டம், காட்டூர் - பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்  கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.  அரசுப் பள்ளிகளில் அறி முகப்படுத்தப்படும் வான வில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் ‘‘எங்கும் அறிவி யல், யாவும் கணிதம்’’ என்ப தாகும். அரசுப் பள்ளி மாண வர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லை யில்லா ஆர்வத்தை உண் டாக்கவும் இம்மன்றம் உரு வாக்கப்பட்டுள்ளது.  அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும், கணி தத்தையும் கற்றுத் தரும் ஆசி ரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கற்பித்தலில் இதுவரை அவர்  கள் கையாண்ட வழிமுறை களை பகிர்ந்து கொள்வதற் கும், இத்திட்டத்தை தொட ர்ந்து செயல்படுத்திட ஆலோ சனைகள் வழங்குவதற்கும், மாநிலம் முழுவதும் இத்திட்  டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படு வார்கள். மேலும், அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோத னைகளுக்கான கருவிகளை உடன் எடுத்து வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு,  அன்பில் மகேஸ் பொய்யா மொழி, தங்கம் தென்னரசு, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாந கராட்சி ஆணையர் வைத்தி யநாதன்  மற்றும் அரசு உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.