india

img

பிரதமரின் பிம்பத்தைக் கெடுக்க சர்வதேச அளவில் சதி நடக்கிறது..... போலி டூல்கிட்டைக் காட்டி பாஜகவினர் அலறல்.....

புதுதில்லி:
தற்போதைய கொரோனா சூழலைப் பயன்படுத்தி, பிரதமர் மோடியின் பிம்பத்தை சிதைக்க, காங்கிரஸ் கட்சி தனியாக ஒரு டூல்கிட்-டை உருவாக்கி, சர்வதேச அளவில் சதி செய்வதாக ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்கள் கூப்பாடு போட்டுள்ளனர்.கொரோனா தொற்றை எதிர்கொள் வதில் மோடி அரசின் செயலற்ற தன்மையை, எதிர்க்கட்சிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மட்டுமன்றி, அனுபம் கெர், பாருல் கக்கார்உள்ளிட்ட பாஜக ஆதரவு பிரபலங்களே கடுமையாக சாடத் துவங்கியுள்ளனர். ஆனால், ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்கள் வழக்கம்போல இது மோடிக்கு எதிரான சதி என்று தப்பித்துச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் பத்திரிக்கையான ‘ஆர்கனைசர்’ ‘காங்கிரசின் கொரோனா டூல்கிட்’ என்ற பெயரில், செய்தி ஒன்றை வெளியிட்டுள் ளது. காங்கிரஸ் கட்சியின் சின்னம் இடம் பெற்றுள்ள அந்த டூல்கிட்டில் (வழிகாட்டல்), காங்கிரஸ் கட்சியினர் ‘இந்திய வகை கொரோனா’, ‘மோடிவகை கொரோனா’ போன்ற வார்த்தைகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அதேபோல பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். மேலும், பாஜக-வின் இந்துத்துவ அரசியலைத் தொடர்ந்து விமர்சிக்கும் வகையில், ‘சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா’ என்றவாசகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தது.

இதையே ஜே.பி. நட்டா, சம்பித்பத்ரா போன்ற பாஜக தலைவர்களும்வசதியாக பிடித்துக் கொண்டு, ‘பிரதமர் மோடி மீதான மரியாதையைச் சிதைப்பதற்காக காங்கிரஸ் கட்சி பெரிய டூல்கிட்டைத் தயாரித்துள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸ் மேலாண்மை, மதரீதியான விஷயங்கள், மத்திய விஸ்டா திட்டம் ஆகியவை குறித்து அவதூறு பரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சில பத்திரிகையாளர்கள் உதவியுடன் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்து, மக்கள் தொடர்புக்கான பயிற்சியாகவும் காங்கிரஸ் கட்சி இதைப் பயன்படுத்துகிறது’ என்று கூப்பாடு போட ஆரம் பித்துள்ளனர்.

ஆனால், பாஜகவின் குற்றச் சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ், ‘பாஜக போலியான டூல்கிட்டைத் தயாரித்துப் பரப்புகிறது’ என்று சாடியுள் ளது. இதற்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, சம்பித் பத்ரா ஆகியோர் மீது காவல்துறை மூலம் வழக்குதொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.