புதுதில்லி:
ஏழை மக்களின் வாங்கும் சக்தி குறைந்துகொண்டே வரும் நிலையில், பணக்காரர்களுக்கான ஒதுக்கீடுகளை மட்டும் அதிகரிப்பதில் என்ன பயன் விளையும்? என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
பட்ஜெட் உரை மீது மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், கடந்த18 மாதங்களாகத் துயரத்தில் ஆழ்ந்துள்ள, 60 விழுக்காடு தொழிலாளர்களுக்கும், தினக்கூலித் தொழிலாளர் களுக்கும், இந்த நிதி நிலை அறிக்கையில் எந்தத் திட்டமும் இல்லை என்ற காரணத்தால், அவர்கள் மீண்டும்துயரத்திலேயே உழல் வார்களே. கடந்த 50-60ஆண்டுகளாக, காங்கிரஸ்அரசினால் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை விற்றுத் தின்றுவிட இந்தஅரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. எனவே, இந்த நிதி நிலை அறிக்கையினால், எந்தப் பயனும் விளையப்போவதில்லை.
மத்திய அரசு நிறுவன மான, தேசிய மாதிரி ஆய்வுநிறுவனம், மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதாக அறிக்கை தந்துள்ளது. ஆனால், இந்த அரசு, மகாத்மா காந்தி ஊரகவேலை வாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.50 ஆயிரம் கோடி குறைவாக ஒதுக்கியுள்ளது. எனவே, மக்களின் வாங்கும் சக்தி மேலும் குறைந்துவிடும். அதனால், ஏற்கெனவே துயரத்திலுள்ள தொழிலாளர்களும், தினக்கூலிகளும் மேலும், வறு மையில் தள்ளப்படுவார்கள். மத்திய அரசின், ஒரு அமைச்சகத்திற்கும், மற்றொரு அமைச்சகத் திற்கும் இடையே, சரியான புரிதல் இல்லை. எனவே திட்டங்கள், வசதியில்லாமல் துயரத்திலிருக்கும் மக்களை நோக்கிச் செயல்படுத்தப் படாமல், ஒருசில வசதியானவர்களுக்காகவே மட்டுமே செயல்படுத்தப்படு கின்றன என்று கூறினார்.