புதுதில்லி:
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யகோரி தில்லியில் 81-வது நாளாக ஞாயிறன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநிலவிவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்தியபாஜக அரசின் சதி முயற்சிகளை முறியடித்தும் காவல்துறையின் தாக்குதலை எதிர்கொண்டும் இந்த போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். பல கட்டபேச்சுவார்த்தை நடத்திய பாஜகஅரசு, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.
விவசாயிகளின் போராட்டத் திற்கு உலகம் முழுவதுமிருந்து பல்வேறு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் உறுதி யாக அறிவித்துள்ளன.இந்நிலையில் ஞாயிறன்று தில்லி எல்லைப்பகுதிகளில் 81-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.