புதுதில்லி:
கொரோனா மூன்றாவது தடுப்பூசி டோஸான பூஸ்டர் தடுப்பூசி குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடுகள் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட அனுமதி வழங்கியுள்ளன.
இதுகுறித்து தேசிய நுண்கிருமி நிறுவனம் தரப்பில் கூறுகையில், ‘‘இந்தியாவிலும் மூன்றாவது டோஸ் தேவையான என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்கு பூஸ்டர் டோஸ் வழங்குவது தொடர்பாக குறைந்தபட்சம் ஏழு வெவ்வேறு தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அதிக வருவாய் மற்றும் குறைந்த வருவாய் பெறும் நாடுகளிடையே தடுப்பூசியில் அதிக அளவில் இடைவெளி ஏற்படும் காரணத்தால் உலக சுகாதார அமைப்பு இந்த முயற்சிகளை கைவிடுமாறு கேட்டுக்கொண்டு ள்ளது. எனினும், எதிர்காலத்தில் பூஸ்டர் டோஸ்களுக்கான பரிந்துரைகள் நிச்சயம் முன்வைக்கப்படும்’’ எனத் தெரிவித்தது.இந்நிலையில், கொரோனாவை தடுக்க பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது கொரோனா தடுப்பூசியின் தேவை குறித்து இந்தியாவிடம் இப்போது போதுமான தரவு இல்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகே இதுபற்றி முடிவு செய்ய முடியும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.