india

மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு ஆட்சியை ... 1ஆம் பக்கத் தொடர்ச்சி....

இந்த பிரச்சனைகளில் எவையாவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலவில்லை என்பதோடு மக்களின் மோசமான நிலைமை மற்றும் அவர்களின்வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களுக்கான தீர்வை ஆகஸ்ட் 15 அன்றைய பிரதமரின் உரையும் வழங்கிடவில்லை.  

இவ்வாறான சூழ்நிலையில் கீழேகையொப்பமிட்டுள்ள நாங்கள் ஒன்றியஅரசிடம் பின்வருவனவற்றை கோருகிறோம்:-

1. இந்தியாவில் உள்ள தடுப்பூசி உற்பத்தி திறன்கள்அனைத்தையும் அதிகரித்திடவும், உலகளவில் தடுப்பூசிகளை வாங்கிடவும், அனைவருக்குமான இலவச தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்திடவும்; கோவிட் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கிடவும்; பொது சுகாதார பராமரிப்பு முறையை விரிவாக்கம்செய்து தொடர்ந்திடவும் வேண்டும்.

2. வருமான வரி வரம்புக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.7,500 இலவச பணப்பரிமாற்றத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டும். அன்றாட நுகர்விற்கான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும்அடங்கிய இலவச உணவுத் தொகுப்பைத் தேவையான அனைவருக்கும் வழங்கிட வேண்டும்.

3. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால்வரியில் முன்னெப்போதும் இல்லாத உயர்வைத்திரும்பப் பெற வேண்டும். சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறிப்பாக சமையல் எண்ணெய்யின் விலையைக் குறைத்திட வேண்டும்.  பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.   

4. விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்து, குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான கட்டாய உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.

5.பொதுத் துறையில் தடையற்ற தனியார்மயமாக்கலை நிறுத்தி அதனை தலைகீழாக மாற்ற வேண்டும்; தொழிலாளர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும் தொழிலாளர் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் போராடும் உரிமை மற்றும் அவர்களுக்கான ஊதிய பேரத்திற்கான உரிமைகளைத் திரும்பத் தர வேண்டும்.

6. குறு-சிறு-நடுத்தர  தொழில் நிறுவனங்களின் மறுமலர்ச்சிக்கென்று கடன்களை வழங்கிடாமல் பண ஊக்கத் தொகுப்புகளைச் செயல்படுத்திட வேண்டும். பொருளாதார, சமூக உள்கட்டமைப்பின் மூலம் வேலைகளை உருவாக்கி உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கும் வகையில்அரசு பொது முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அரசுப் பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும்.

நாட்கள் அதிகரிப்பு- நகரத்துக்கும் விஸ்தரிப்பு

7. இருநூறு நாட்களுக்கு குறைந்தபட்சம் இரட்டிப்பு ஊதிய உத்தரவாதத்துடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விரிவாக்கிட வேண்டும். அதே போன்ற நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்.

8. ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளித்து மீண்டும் கல்வி நிறுவனங்களை விரைவில் திறப்பதை உறுதி செய்திட வேண்டும்.

9. மக்களைக் கண்காணிப்பதற்காக பெகாசஸ் உளவு மென்பொருளை உபயோகித்தது குறித்துஉடனடியாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பு நீதிவிசாரணையை நடத்த வேண்டும். ரஃபேல்ஒப்பந்தம் தொடர்பான உயர் மட்ட விசாரணையை மேற்கொண்டு, முந்தைய ஆர்டரையும், அதிக விலைக்கு புதிய ஆர்டரைக் கொடுப்பதையும் ரத்து செய்ய வேண்டும்.

10.பீமா கொரேகான் வழக்கில் கடுமையானஉபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களையும், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு  போராட்டங்கள் உட்பட அனைத்து அரசியல்கைதிகளையும் விடுதலை செய்திட  வேண்டும்.தேசத்துரோகம்/என்எஸ்ஏ போன்ற கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி ஜனநாயக உரிமைகள், மக்களின் சிவில் உரிமைகள் மீறப்படுவதை நிறுத்திட வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற தங்களுடைய அடிப்படை உரிமையைப் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் ஊடகத்துறை சார்ந்த  அனைவரையும் விடுவிக்க வேண்டும்.  

11. ஜம்மு&காஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். ஜம்மு&காஷ்மீர்மத்திய சேவைப் பணி உள்ளிட்டு முழு மாநிலஅந்தஸ்தை திரும்பத் தர வேண்டும். விரைவில் சுதந்திரமான நியாயமான தேர்தலை அங்கே நடத்திட வேண்டும்.

போராட்ட வடிவங்கள்
கீழே கையொப்பமிட்டிருக்கும் கட்சிகள் 2021செப்டம்பர் 20 முதல் 30 வரைநாடு முழுவதும் கூட்டாக போராட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும். இந்த பொது எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வடிவங்கள் கோவிட் விதிமுறைகளின் நிலைமைகள் மற்றும் தற்போதுள்ள நெறிமுறைகளைப் பொறுத்து கட்சிகளின் அந்தந்த மாநிலக் கிளைகளால் தீர்மானிக்கப்படும். தர்ணாக்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், ஹர்த்தால் போன்றவை இந்தபோராட்ட வடிவங்களில் அடங்கும்.பத்தொன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்களாகிய நாங்கள் நமது மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு ஆட்சியைப்  பாதுகாத்திட இந்திய மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். இன்று இந்தியாவைக் காப்பாற்ற வாருங்கள், அதன் மூலம் நமது வருங்காலத்தை நாம் சிறப்பாக மாற்றி அமைக்கலாம்.

கையெழுத்திட்டுள்ள கட்சிகள்
இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசியவாத காங்கிரஸ் கட்சி,திரிணாமுல் காங்கிரஸ்,திராவிட முன்னேற்றக் கழகம்,சிவசேனா,தேசிய மாநாட்டுக் கட்சி,ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா,மக்கள் ஜனநாயக கட்சி,ராஷ்ட்ரிய ஜனதா தள்,ராஷ்ட்ரிய லோக் தள்,அனைத்திந்தியஐக்கிய ஜனநாயக முன்னணி,லோக்தந்த்ரிக் ஜனதா தள்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி,கேரள காங்கிரஸ் (மணி),இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,விடுதலை சிறுத்தைகள் கட்சி,மதச்சார்பற்ற ஜனதா தள்,சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ்உத்தரப் பிரதேசத்தின் உட்பகுதியில் இருப்பதால் இணைய வழி இணைப்பில்உள்ள பிரச்சனை காரணமாக கூட்டத்தில்கலந்து கொள்ள இயலாது என கடிதம் அனுப்பியிருந்தார்.  அவருக்கு இந்த கூட்டறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழில்: பேரா.தா.சந்திரகுரு