india

img

ஆர்எஸ்எஸ்-காரர்கள் சிறப்புக் காவலர்களாக நியமனம்..... அடையாள அட்டையும் வழங்கியது பாஜக அரசு...

டேராடூன்:
கும்பமேளாவில் கூட்ட நெரிசல்மற்றும் போக்குவரத்தைச் சமாளிப்பதற்காக, ஆர்எஸ்எஸ்-காரர்களை ‘சிறப்புக் காவல் பணியாளர்கள்’ என்ற பெயரில், உத்தரகண்ட் மாநில பாஜக அரசு நியமித்துள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கும்பமேளா போன்றவற்றின்போது, ஆர்எஸ்எஸ்-காரர்கள் தாங்களாகவே பக்தர்களுக்கு உதவி செய்யும் பணிகளில் ஈடுபடுவது வழக்கமானதுதான் என்றாலும், உத்தரகண்ட் மாநில பாஜக அரசின் காவல்துறையானது, அவர்களை தற்போது அதிகாரப்பூர்வ மாகவே ‘சிறப்புக் காவல் பணியா ளர்கள்’ என்று அடையாள அட்டை வழங்கி பணியில் அமர்த்தியுள்ளது.இவ்வாறு ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பணியில் அமர்த்துவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

காவல்துறை சார்பில் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தாலும், அவர்களுக்கு எவ்வித ஊதியமும் அளிக்கப்படாது; அவர்கள் தாமாக முன்வந்து இந்தபணியைச் செய்கிறார்கள் என்றும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், தாங்களாக அடையாள அட்டை எதையும் கேட்கவில்லை என்றும், “கடந்த மார்ச் மாதம் ஐ.ஜி. சஞ்சய் குன்ஜி எங்களைத் தொடர்புகொண்டு, ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்கள் கும்பமேளாவில் சிறப்புக் காவல் பணியாளர்களாக பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்” என்றும் ஆர்எஸ்எஸ்-சைச் சேர்ந்த பிரமுக் சுனில் தெரிவித்துள்ளார்.