புதுதில்லி:
2021-22 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு, மோடி அரசு ரூ. 35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் பாராட்டு தெரிவித்து உள்ளது.
‘2021-22 நிதியாண்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது, முன்னோக்கி எடுத்துவைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஒரு அடி மட்டுமின்றி, தொலைநோக்கு சார்ந்த பட்ஜெட் அறிவிப்பும் ஆகும். கொரோனாவை தடுப்பதற்காக மிகப்பெரிய நிதியை ஒதுக்கியிருப்பதன் மூலம், கொரோனா இல்லா இந்தியாவாக மாறும்’ என்று பாரத்பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா குறிப்பிட்டு உள்ளார். தேசிய சுகாதார திட்டத்துடன் கூடுதலாக ரூ. 64 ஆயிரத்து 180 கோடி சுகாதார திட்டம் ஒன்றை அறிவித்திருப்பதையும் எல்லா வரவேற்றுள்ளார். “இது பொது சுகாதார திட்டங்களை வலுப்படுத்தும். இந்த மைல்கல் பட்ஜெட் மூலம் ஆரோக்கியத்தை நாட்டின் எதிர்கால வெற்றியின் அடிக்கல்லாக மாற்றும் நோக்கத்தை அரசு அடையாளம் காட்டியிருக்கிறது” என்றும் புல்லரித்துள்ளார்.