india

img

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து ஆராய்ச்சி... ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்....

புதுதில்லி:
கொரோனா பரவல் தொடர்பாக நாடு முழுவதும்இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ( ஐ.சி.எம்.ஆர்) ஆய்வு நடத்த உள்ளதாக ஒன்றிய  சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியில் உயரிய அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), கொரோனா பரவலை மதிப்பிடுவதற்காக நாடு முழுவதும் ‘செரோ’ ஆய்வை தொடங்க உள்ளது. அதுபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்தகைய ஆய்வைநடத்த வேண்டும். இதன்மூலம் அனைத்து புவியியல் சார்ந்த தகவல்களையும் பெற முடியும்.நாட்டில் கொரோனா நிலவரம் சீராகி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 78 சதவீதம் குறைந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதத்தில் 74 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுகுறைந்து வருவதற்காக பொதுமக்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது. கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைத்தால்தான், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீதான அழுத்தம்குறையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.