india

img

மாநிலங்களின் அதிகாரத்தை உறுதி செய்த ஓபிசி இடஒதுக்கீடு சட்டமசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்....

 புதுதில்லி:
இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பட்டியலை மாநில அரசுகளே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும்  அரசியல் சாசன திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் பிற மாநில அரசுகள், அரசியல் கட்சியினரின் வலியுறுத்தலைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளித்தன. இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த அரசியல் சாசன திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், ஓபிசி பட்டியலை நிர்ணயம் செய்யும் உரிமை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து இட ஒதுக்கீட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 127வது சட்டத்திருத்தம் ஒன்றிய அரசிதழில் வெளியிடப்பட்டது.