புதுதில்லி:
தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் மூலம் நிதியுதவி செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் என்ற திட்டத்தின்கீழ் இந்த உதவி வழங்கப்படும்.கொரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்தகுழந்தைகள் 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். 23 வயதை அடைந்ததும் பிஎம் கேர்ஸ் நிதியில் இருத்து ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.